சானாவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் வான் தாக்குதல் – 14 பேர் பலி

240 0

யேமன் தலைநகர் சானாவை அடுத்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில் சிறார்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தலைமையிலான படையணியினரே இந்த வான் தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வான் தாக்குதலை அடுத்து மீட்பு பணியாளர்கள் கட்டட இடிபாடுகளை துரித கதியில் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மரணமானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இரு பாரிய கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதாக பிரதேச வாசிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தலைநகருக்கு வடக்கேயுள்ள அர்ஹாப்பில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலின் போது 41 பொது மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 மார்ச் மாதத்திற்கு பின்னர் சவுதி அரேபியாவின் தலைமையிலான துருப்பினர் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர், மோதல் சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

Leave a comment