ஹாடோ சூறாவளியினால் 12 பேர் பலி

365 0

தெற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள ஹாடோ சூறாவளியினால் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்,100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் க்வான்டோங், பிராந்தியத்தில் சுஹுவாய் நகரே குறித்த சூறாவளியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இதுவரை 27,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சீன அரச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் தெற்கு சீனாவில் கனமழை பெய்துவருவதையடுத்து இங்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a comment