நெதர்லாந்தில் அமெரிக்க இசை கலைஞர்களால் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சி தீவிராத அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திப்பட்டுள்ளது.
அல்லாஹ்-லாஸ் என்ற இசை குழுவினரால் நேற்று மாலை இசை நிகழச்சி நடைபெற இருந்த நிலையில், நெதர்லாந்து பொலிஸார் இசைக் கச்சேரி நடைபெறவிருந்த அரங்கிற்கு அருகில் எரிவாயுக்கள் நிரப்பிய வேன் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்தே இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பெயின் நாட்டு வாகன பதிவு எண்களை கொண்ட குறித்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிர விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

