சூடானிற்கான ரஷ்ய தூதுவர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கி அவரது இல்லத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுடான் தலைநகர் கார்டோமில் உள்ள அவரது இல்லத்தில் அவரின் உடலை நீச்சல் குளத்தில் கண்ட பொலிஸார் அவரை மீட்டதுடன் உடனடியாக வைத்தியர்களை வரவளைத்திருந்த போதிலும் அவரை காபாற்ற முடியவில்லை என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
62 வயதுடைய மிர்கயாஸ் உயர் இரத்த அழுத்தம் காரணமாக இயற்கையான முறையில் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தூதுவரின் உடலை ரஷ்ய நாட்டிற்கு கொண்டு செல்லும் பணிகளில் ரஷ்ய அதிகாரிகள் ஈடுப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

