தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக இ.இரவீந்திரன் நியமனம்

320 0

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றும் இ.இரவீந்திரன் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கக்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுக்களின் செயலாளராகப் பணியாற்றிய இ.இரவீந்திரன் எதிர் வரும் 2017-09-01 முதல் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சின் தற்போதைய செயலாளராக சிவஞானசோதி பணியாற்றும் நிலையில் இரவீந்திரன் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த இடமாற்றத்தினை பொதுச் சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

வட மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றும் செயலாளர் வட மாகாண அமைச்சுக்களில் மட்டும் 20 வருட காலம் பணிபுரிந்ததன் அடிப்படையிலேயே குறித்த இடமாற்றம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment