ஏமனில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏமன் தலைநகர் சனாவின் வடக்கு பகுதியில் உள்ள உணவு விடுதி ஒன்றின் மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதல் தொடர்பில் சவுதி தலைமையிலான கூட்டணி படைகளின் செய்தி தொடர்பில் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

