கேப்பாபுலவு காணி விடுவிக்க அமைச்சரவை அனுமதி

382 0
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள 111 ஏக்கர் காணியினை மக்களிடம் கையளிக்க அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகசந்திப்பில் வைத்து அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார்.
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முல்லைத்தீவு-கேப்பாபுலவு கிராம மக்களின் 432 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 111 ஏக்கர் காணியினை மக்களிடம் கையளிக்க இராணுவத்தினது இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளர்.
அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணு முகாமினை அகற்றி வேறொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியினை ஒதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment