அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்றின் ஊடாக நேற்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த கடிதத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

