25,000 அபராதப் பணத்திற்கு எதிராக தயாராகும் தொழிற்சங்கங்கள்

315 0

அரசாங்கத்தினால் அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வாகன அபராதப் பணம் 25,000 ரூபாவிற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முச்சக்கர வண்டிகள் சங்கம், மோட்டார் மற்றும் பாடசாலை வேன் சங்கங்கள் என்பன தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி சட்டத்திட்டங்களை பேணுவதற்கு தமது சங்கங்கள் தயாராக இருக்கும் அதேவேளை போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட வீதி ஒழுங்கு பிரச்சினைகள் என்பன  வீதிகளில் குறைந்த வசதிகள் காணப்பவதாலேயே ஏற்படுவதாக இளைஞர் அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் சுஜித குருவிட்ட தெரிவித்துள்ளார்.

எனவே இதனைப் பயன்படுத்தி அரசு பணம் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக போக்குவரத்து தடையை அதிகரிக்கும் அரசின் நடவடிக்கை சாதாரணது அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக போராட்டங்கள் செய்ய தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment