பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்கான விலையை கொடுக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எதிர்த்து போரிடும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அந்நாடு பெரிய இழப்புக்களை சந்தித்து வருகிறது. இந்தநிலையை உடனடியாக மாற வேண்டும் உள்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாகிஸ்தான் அமைதிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

