ரயன் ஜயலத் மீண்டும் விளக்கமறியலில்

314 0

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த அவர் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது அவரை வரும் 25ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்தை நீதவான் நீதிமன்ற நீதிபதி துலானி எஸ். சேரசிங்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற சயிடம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருக்கும் சொத்துக்களுக்கு சேதம் எற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a comment