எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமியிற்கு பதிலாக புதிய முதல்வர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,“ஊழலுக்கு எதிரானவர் என தன்னை பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, இன்று 2 ஊழல் அணிகளையும் இணைத்துள்ளார்.
எடப்பாடி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனால் ஆளுநர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.” தெரிவித்துள்ளார்.

