கடந்த 2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்..
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரையிலும் நட்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
2014ம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், சுமார் 280 குடும்பங்கள் வரை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

