எடப்பாடியை நீக்குமாறு தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கோரிக்கை

188 0

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குமாறு கோரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ்விடம், தினகரன் ஆதரவு தப்பினர் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருந்த இந்நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் அணிகள், நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் இணைந்தன.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிலையில், குறித்த இரண்டு அணிகளின் இணைவு தொடர்பில், டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், 18 பேர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் மீள இணைந்தமை குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளிட்டதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, இன்று முற்பகல் 10 மணியளவில், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்ற வேண்டும் என அவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அண்ணா திராவிட கழக உறுப்பினரான மைத்ரேயன் ஆளுநரை சந்திக்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment