கிரிஸ் கெயில் (Chris Gayle) மற்றும் மாலன் சாமியல்ஸ் (Marlon Samuels) ஆகியோர் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு நாள் குழாமிற்காகவே இவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிரிஸ் கெயில் இறுதியாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதமே, மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அதுபோல், மாலன் சாமுவேல்ஸ் இறுதியாக 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத்திலே விளையாடியுள்ளார்.
இந்தநிலையில் இங்கிலாந்து அணியுடனான மேற்கிந்திய ஒருநாள் அணி விபரம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெயிலரும் (Jerome Taylor) அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஜேசன் வோல்டர் தலைமையில் Jason holder, Sunil Ambris, Devendra Bishoo, Miguel Cummins, Chris Gayle, Kyle u;ope, Shai u;ope, Alzarri Joseph, Evin Lewis, Jason Mohammed, Ashley Nurse, Rovman Powell, Marlon Samuels, Jerome Taylor, kw;Wk; Kesrick Williams ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

