மாலிங்கவிற்கு வயதாகிவிட்டதால் வேகம் குறைந்து விட்டது

281 0

மாலிங்கவிற்கு வயதாகிவிட்டதால் அவரது பந்து வீச்சு வேகம் குறைந்து விட்டதாக இந்திய அணி வீரர் சிகார் தவான் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தம்புள்ளயில் நடைபெற்ற இந்திய அணியுடனான ஒருநாள் போட்டி நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சிகார் தவான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாலிங்க இலங்கை அணியின் சிறந்த வீரர் என்றும்,அவர் இலங்கைக்கு விளையாட்டு மூலம் பல சேவைகளை செய்துள்ளதாகவும் தவான் தெரிவித்துள்ளார்.

எனினும் அவருக்கு தற்போது வயதாகிவிட்டதால் அவரது பந்துவீச்சு வேகம் குறைந்து விட்டதாகவும்,இதன்காரணமாகவே தமது அணி அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டதாகவும் சிகார் தவான் குறிப்பிட்டுள்ளார்.

இது மனித வாழ்வில் சகஜம் என்றும்,இலங்கை அணியில் சிறந்த வீரர்கள் உள்ளதாகவும்,ஆனால் அவர்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான காலம் அவசியம் என்றும் சிகார் தவான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment