நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு தற்சமயம் அலரி மாளிகையில் கூடியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடியுள்ள குறித்த நாடாளுமன்ற குழு நீதி அமைச்சர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எட்டவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் சிலர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடையே இன்று மதியம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன் போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் பரிந்துரைகள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

