ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதியை சந்திக்கின்றது

8917 0

ஐக்கிய தேசிய முன்னணியை அங்கத்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு கடந்த வாரம் இடம்பெறவிருந்த போதும் இன்று வரையில் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவதற்கு ஏதுவான 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment