கிளிநொச்சி யில் புலமைசார் குறைபாடுடையவா்களுக்கு செயலமர்வு

1007 0
கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அவுலகத்தின் ஏற்பாட்டில் புலமைசார் குறைபாடுடையவா்கள் நலன்புரிச் சங்கத்தினரால் புலமைசார் குறைபாடுடையவா்கள் மற்றும் அவா்களை பராமரிக்கின்றவா்கள்  ஆகியோருக்கான செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
இன்று  கிளிநொச்சி சமூக சேவைகள் அலுவலகத்தில் இடம்பெற்ற செயலமா்வில் மாவட்டத்தில் உள்ள பல புலமைசார் குறைபாடுடையவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்கள் பராமரிப்பாளர்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
 கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள்  உத்தியோகத்தா் வே. தபேந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவா் ஜெகரூபன்,புலமைசார் குறைபாடுடையவா்கள் நலன்புரிச் சங்கத்தின் ஊழியர்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Leave a comment