அமெரிக்க போர்க்கப்பல் லிபிய சரக்கு கப்பலுடன் மோதல் 

366 2

சிங்கப்பூர் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று, சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 10 அமெரிக்க படை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ஜான் மெக்கெயின் என்ற அதிநவீன போர்க்கப்பல் சிங்கப்பூர் கடலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, லிபியாவிற்கு சொந்தமான அல்னிக் என்ற சரக்கு கப்பலுடன்  மோதியுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது லிபிய சரக்கு கப்பலில் 30 ஆயிரம் டொன் நிறை கொண்ட சரக்கு களஞ்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க போர்க் கப்பல் பெரும் அளவில் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment