அமைச்சரவைப் பொறுப்புக்களை மீறும் எந்த அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தொடர்பிலேயே அவரின் பெயரைக் குறிப்பிடாமல் சரத் அமுனுகம இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை வெளிமேடைஒன்றில் வைத்து விஜயதாஸ ராஜபக்ச விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் அவரை பதவி நீங்கவேண்டும் என்று அவரின் சொந்தக்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் பலரும் கோரிவருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளராக உள்ள பிரதி அமைச்சர் திலான் பெரேரா, நீதியமைச்சர் விஜயதாஸ பதவி விலகினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையவேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு மத்தியிலேயே ஜனாதிபதியினால் விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, விஜயதாஸ பதவிவிலக வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

