சிரியா: சர்வதேச வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடித்து 6 பேர் பலி

12595 0

சிரியாவில் நடந்த வர்த்தகர்கள் கண்காட்சியில் திவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உலக வர்த்தக கண்காட்சி நடைபெற்று வந்தது. 2011-ம் ஆண்டிற்கு பிறகு அந்நாட்டில் தொடங்கிய உள்நாட்டு போரால் இந்த கண்காட்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது பிரச்சனைகள் சற்று குறைந்துள்ளதை அடுத்து கடந்த வாரம் மீண்டும் உலக வர்த்தக கண்காட்சி தொடங்கியது. இதில் உலகின் சுமார் 45 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று வர்த்தகர்கள் மாநாடு நடந்த இடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஆறு பேர் இறந்திருக்காலாம் என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கூட்டமைப்பை சேர்ந்த ரபி அப்துல்ரகுமான் என்பவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 10 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a comment