பெட்ரோலியம், வெளியுறவுத்துறைக்கு புதிய மந்திரிகளை நியமிக்க ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல்

402 0

ஈரான் நாட்டில் பெட்ரோலியம், மற்றும் வெளியுறவுத்துறைக்கு புதிய மந்திரிகளை நியமிக்கும் அதிபரின் முடிவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரான் நாட்டு மந்திரிசபையில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பிய அதிபர் ஹசன் ரவுகானி பெட்ரோலியத்துறை மந்திரியாக பிஜன் ஜன்கனே என்பவரையும், வெளியுறவுத்துறை மந்திரியாக முஹம்மது ஜாவத் ஸரிஃப் என்பவரையும் நியமிக்க தீர்மானித்தார்.

இவர்களில் பிஜன் ஜன்கனே ஈரான் மீது விதித்திருந்த சில பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டின் கூட்டுறவுடன் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய கிணறு ஒன்றை ஏற்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்.

இதேபோல், உலக நாடுகளுடன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிடவும், இதன் விளைவாக ஈரான்மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் விலகவும் வெளியுறவுத்துறை மந்திரியாக முஹம்மது ஜாவத் ஸரிஃப் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment