5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை

520 0

கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியது தொடர்பாக அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் உறுப்பினர் ஷேக் ரொஹைல் அஸ்கார் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:-

* கடந்த 5 ஆண்டுகளில், அதாவது 2012-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ந் தேதி வரையில் பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

* 2012-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 48 பேருக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது.

* 2013-ம் ஆண்டு 75 இந்தியர்களுக்கும், 2014-ம் ஆண்டு 76 இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

* 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 15 பேருக்கும், 2016-ம் ஆண்டு 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி வரையில் 15 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை தந்துள்ளது.

* கணவர் இறந்து விட்ட நிலையில் இந்திய பெண் ஒருவருக்கு முன்னாள் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் உத்தரவின்பேரில் குடியுரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment