ஆப்கானிஸ்தான்: பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி இசைக்கச்சேரி நடத்திய பெண் கலைஞர்

17278 0

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பிரபல பெண் இசைக்கலைஞர் அர்யானா சயீத் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி காபூல் நகரில் கச்சேரி நடத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது தாலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் தற்போது அங்கு பெண் சுதந்திரம், உரிமைகளுக்கான குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றது. அந்நாட்டைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞர் அர்யானா சயீத் சுதந்திர தினத்தை முன்னிட்டு காபூல் நகரில் கச்சேரி நடத்த முடிவு செய்திருந்தார்.

அர்யானாவின் கச்சேரிக்கு பழமைவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், காபூல் நகரில் சமீப காலமாக தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாலும், அவரது கச்சேரியை தள்ளி வைக்குமாறு போலீசாரும் கூறியிருந்தனர். ஆனால், எதிர்ப்புகளை புறம்தள்ளி அர்யானா காபூல் நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தனது கச்சேரியை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

காபூல் நகரில் மிகவும் அரிதாக நடைபெரும் இது போன்ற இசைக்கச்சேரியை காண அதிகமான இளைஞர்கள், இளம் பெண்கள் குவிந்திருந்தனர். 3000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment