ஹம்பாந்தொடை -இந்தரவேவ – மத்தள பழைய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாரவூர்தி ஒன்றுடன் உந்துருளி மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த உந்துருளியாளர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்தினை தொடர்ந்து பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் குறித்து காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று இரவு கிரியுல்ல பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

