இராணுவத்தினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 700 க்கும் அதிகமான இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இராணுவத்தில் சரணடைவற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் சரணடையாதவர்களை கைதுசெய்வதற்கு நேற்றைய தினம் இந்த சுற்றவளைப்பு நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 724 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

