அரச தொழில்வாய்ப்புகளில் இன விகிதாசாரம் அவசியாமாகும் – டக்ளஸ்

265 0

அரச தொழில்வாய்ப்புகளின்போது இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியாமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார

அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மொழியினை தாய்மொழியாக கொண்டவர்களை தகைமை, திறமை அடிப்படையில் உயர் பதவிகளில் அமர்த்தி வருவது பாராட்டத்தக்கது.

அத்துடன் அரச தொழில் வாய்ப்புகளின்போதும் இன விகிதாசாரம் பேணப்படுதலும் இன்று மிகவும் அவசியமாகும்.

இன்றைய சூழ்நிலையில், அரச தொழில் வாய்ப்புகளின்றி பெரும்பாலான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் போராட்ட நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இனியும் இந்த நிலை தொடருமானால் எமது மக்கள் தடம் மாறிச் செல்கின்ற நிலைமைகள் தவிர்க்க முடியாததாகிவிடலாம் எனவும் டக்ளஷ் தேவாநந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment