மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

18998 65

மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூ வீதிக்கு முன்னாள் உள்ள வாவக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சுமார் 60 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாததால் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஓப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment