இலங்கையில் மின்சார ரயில் சேவை

5344 0

இலங்கையில் மின்சார ரயில் சேவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரை மையப்படுத்தி பாணந்துறை, பொல்கஹவெல, நீர்கொழும்பு, களனிவெளி ஆகிய புகையிரத போக்குவரத்து பாதைகளில் சுமார் 138 மீட்டர் தூரத்திற்கு குறித்த சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டமானது 3 வருடத்திற்குள் நிறைவுசெய்ய கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த திட்டத்திற்கான டெண்டர் பத்திரம் தென்கொரியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment