கழிவுகள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நட்டப்பட்டது!

331 0

கழிவுகள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் “மேல் மாகாண குப்பைகள் மின் உற்பத்திக்கு” என்ற திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (17) முற்பகல் இடம்பெற்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட நகர திண்மக்கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தும் வகையில் கரதியான திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு ´மிஹிசரு வியமன´ வள முகாமைத்துவ நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

பெருநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினதும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினதும் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கரதியான திண்மக்கழிவு முகாமைத்துவ திட்ட நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் பெருமளவான குப்பைகள் ஒன்று சேர்வதுடன், அதில் 500 மெட்ரிக் தொன் அளவை இந்த வேலைத்திட்டம் ஊடாக மின்சாரமாக மாற்றக்கூடிய நிலை உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை இந்த திட்டத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை 37,500 வீடுகளுக்கு வழங்க முடியும் என்றும் மின்சாரத்திற்கு மேலதிகமாக பசளை தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment