இரட்டை இலை சின்னத்தை பெற உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர தீபா அணி முடிவு 

7278 0

அ.தி.மு.க. இணைப்பு முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி – ஒ.பி.எஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஒன்று சேரலாம் என்கிற பரபரப்பு அரசியல் களத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

அப்படி இரண்டு அணிகளும் இணைந்தால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் நிலை உள்ளதாக இருக்கிறது.

ஆனால் அ.தி.மு.க. தீபா அணியினர் இதற்கு முட்டுக் கட்டை போடும் நிலையில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவே அ.தி.மு.க.வின் உண்மை யான வாரிசு என்றும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 5 லட்சம் பிரமாண பத்திரங்கள் தீபா அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க கொடியையும் பயன்படுத்துவதற்கு தீபா அணியை அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பப்பட்டது.

Leave a comment