விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்

218 0

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இதுவரை 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்பீட கூட்டத்தில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாளை நடைபெறவுள்ள உயர்பீட கூட்டமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்திற்கு உடன்பட்டு பின்னர் அதற்கெதிராக கருத்து தெரிவித்தமையானது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிற்கு பாதகமாகியுள்ளதாக ஜேதாச ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தான் நிதியமைச்சராக இருக்கும் வரை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை ஐ.தே.க. உறுப்பினர்களிடையே பாரிய விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment