திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி 

355 0

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி மீண்டும் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலை 6.30 மணியளவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், சிகிச்சைக்கு முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 7 மாதங்களாக ஓய்வு பெற்று வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இன்று காலை மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மருத்துவமனையில் உள்ளனர்.

சாதாரண பரிசோதனைக்காகவே தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்டிருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்படுகிறது என  பொன்முடி குறிப்பிட்டார்.

Leave a comment