ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டால் அதற்கான ஆதாரங்கள் சமர்பிக்கப்படும் என சசிகலாவின் உறவினர் ஜெயானந்த் திவாகரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தினார்.
அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என தினகரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சசிகலாவின் உறவினரான ஜெயானந்த் திவாகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு போட்டியளித்துள்ளார்.
அதில், ஜெயலலிதா சிகிச்சை குறித்த 100 சதவிகித ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
நீதி விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமர்பிக்கப்படும்.
முதலமைச்சர் பழனிசாமி விருப்பப்பட்டால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம் என குறிப்பிட்டார்.