இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில்(காணொளி)

1691 24

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்திய தேசியக் கொடி ஏற்றபட்டு, தேசிய கீதம் இயற்றப்பட்டு, தேசியக் கொடியை யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர், யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

Leave a comment