அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை

14982 0

அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, புதிய தடைகளை விதிக்க முயற்சிக்குமாயின், தமது நாட்டின் அனு ஆயுத  பலம் காண்பிக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி எச்சரித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் தமது அனு ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டிருந்தது.

இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஈரான் பரிசோதித்ததாக தெரிவித்து, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது.

ஈரானின் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறும் வகையில் உள்ளாதாக அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

எனினும், அண்மையில் வெடிபொருட்கள் அடங்கிய ஏவுகணையொன்றை பரிசோதித்தாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான தடைகள்  அனு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கையை மீறும் வகையில் உள்ளதாகவும் ஈரான் சுட்டிக்காட்யுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதிக்க முயற்சிக்குமானால், ஒரு சில மணித்தியாலங்களில் தமது அனு ஆயுத திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என ஈரான் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

இந்தத் திட்டமானது 2015 ஆம் ஆண்டைவிட  சக்திவாய்ந்தாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Leave a comment