சட்டவிரோத விமான பயணங்களை தடுப்பதற்கான விஷேட நடவடிக்கை வெற்றி

240 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்ட விரோதமாக பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துவதற்கான ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நடவடிக்கைகள் வெற்றியளித்திருப்பதாக இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது,

சட்டவிரோதமாக நாட்டு எல்லைகளை தாண்டி ஏனைய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வது சர்வதேச அளவில் எழுந்துள்ள பிரச்சினையாக காணப்படுகிறது.

இது போன்ற சட்டவிரோத பயணங்களை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், உலகம் பூராகவும் சர்வதேச விமான நிலையங்கள் ஊடாக இதுபோன்ற சட்டவிரோத பயணங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

செல்லுபடியான கடவுச்சீட்டின்றி மற்றும் வீசா இன்றி இவ்வாறு சட்டவிரோத விமான பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் பாரியளவான தண்டப் பணத்தை செலுத்த வேண்டி ஏற்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஆவணங்களை பரிசோதனை செய்வதற்காக விஷேட பயிற்சி பெற்ற அலுவலர்கள் இலங்கை விமான நிறுவனத்தில் இருப்பதாகவும், போலி பயண ஆவணங்களை கண்டறிவதற்காக வௌிநாட்டு தூதரகங்கள் ஊடாக விஷேட பயிற்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இதுபோன்ற சட்டவிரோத பயணிகளை கண்டறிவதற்காக, இலங்கை விமான நிறுவனத்தின் பணியாளர்கள், இலங்கை பொலிஸார், சுங்கப் பிரிவு மற்றும் குடிவரவு, குடியகல்வு பிரிவினருடன் இணைந்து செயற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment