அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சுப் பதவியை ரவி கருணாநாயக்க ராஜினாமா செய்தார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி பிளவடைந்து வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் எவ்வாறு செயற்பட வேண்டும் என அமைச்சர்கள் ஆலோசனை வழங்குவது ஆபத்தான நிலைமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ள வாசுதேவ சட்ட மா அதிபர் அரசாங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

