பிரான்ஸ்: தற்கொலை செய்வதற்காக உணவகத்திற்குள் காரை மோத விட்ட நபர் – சிறுமி பலி

340 0

பிரான்ஸ் நாட்டில் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் உணவகத்திற்குள் காரை மோத விட்ட நபரால் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் கிழக்குப்பகுதியில் உள்ள ஸ்டெப் சோர்ட்ஸ் என்ற இடத்தில் இருக்கும் உணவகத்தில் நேற்று கார் ஒன்று வேகமாக புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில், உணவகத்தில் இருந்த 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய நபரை உடனடியாக கைது செய்த போலீசார், தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அவர் காரை உணவகத்தில் மோத விட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைதான நபருக்கு குற்றப்பிண்ணனி ஏதும் இல்லை என செய்தியாளர்களிடம் கூறியுள்ள அந்நாட்டு உள்துறை மந்திரி, தீவிரவாத தாக்குதல் என்ற கருத்தை மறுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பாரீஸ் நகரில் ரோந்து பணியிலிருந்த ராணுவ வாகனம் மீது கார் மோதியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment