செஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் யேர்மனியில் நடைபெற்ற நீதிகோரல் நிகழ்வு

2724 0

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.11 ஆண்டுகள் கடந்து சென்றாலும் இப்படுகொலைக்கு நீதி கோரும் முகமாக யேர்மனியின் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் Brandenburger Tor க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்தோடு வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.

இன்றைய தினத்தில் Stuttgart நகரத்திலும் செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.அங்கும் நகர மத்தியில் பல்லின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.இரு நிகழ்விலும் சிங்கள பேரினவாத அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் முகமாக “146679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது” என யேர்மன் மொழியில் பதாதைகள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

Leave a comment