விஜேதாச மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 4 விடயங்கள்!

376 0

விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடங்காத மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு காரணமாகிய 4 விடயங்கள் உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனிதவுரிமை தொடர்பான விசேட செய்தியாளர் பென் எமர்சன் வௌியிட்டுள்ள தகவல்கள் பிழையானது என கூறுதல்.

அரசாங்கம் பாதுகாப்பு பிரிவின் மூலமாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இல்லை என கூறும் நிலையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் இருப்பதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் 11 பேர் தற்போது போராடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறியமை.

முஸ்லிம் அடிப்படைவாதிகள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகள் வடக்கு கிடக்கில் புரதான பொருட்களை நாசம் செய்வது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பௌத்த அமைப்புகளுடன் சென்று ஜனாதிபதியை சந்தித்தமை மற்றும் இலங்கையின் பெறுமதியான வளமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றமை அரசாங்கத்தின் பாரிய தவறு என குற்றம்சுமத்தியமை உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடங்குவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற பிவித்துரு ஹெயவுருமயவின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

Leave a comment