ஐஎஸ் தீவிரவாத தாக்குதல் – ஜேர்மனால் தடுப்பு நடவடிக்கைகள்

301 0

80861315_025750945-1ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அண்மைய தாக்குதல்களை அடுத்து,  புதிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜேர்மன் அறிவித்துள்ளது.
ஜேர்மனின் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மெய்சிரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காணொளி கண்காணிப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுடன் அவர்களை நாடு கடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இஸ்லாமியர்களின் பர்ஹா ஆடைகளுக்கும், அடிப்படைவாத இஸ்லாமிய நிறுவனங்களுக்கான நிதிகளுக்கும் தடையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரட்டைகுடியுரிமைக்கு தடையை கொண்டு வரும் யோசனை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.