பாகிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா – ஏற்பாடுகள் தீவிரம்

233 0
 பாகிஸ்தான் நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவத்தினரும், பொலிஸாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, இஸ்லாமாத்தில் உள்ள பாத்திமா ஜின்னா பூங்கா மற்றும் கராச்சி கடற்கரை பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படையின் கண்கவர் வண்ண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் கலந்து கொள்கிறார்.
இதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment