வடமாகாண சபையில் அசாதாரண சூழ்நிலை – டெனிஸ்வரனின் எச்சரிக்கை

307 0

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையினால் மாகாண அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச்செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப்பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்றுகொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை முதலமைச்சர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து நேர்த்தியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லவேண்டும்.

குறிப்பாக விவசாய அமைச்சு பொறுப்பு முதலமைச்சர் வசமே உள்ளது.
ஆனால் தற்பொழுது அந்த அமைச்சில் பல வேலைத்திட்டங்கள் தேங்கிக் கிடக்கின்றன.

ஆகவே சம்மந்தப்பட்டவர்களை அந்த பதவிக்கு உரியமுறையில் நியமித்து, மிகவிரைவாக அவ்வேலைதிட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த கால தவறுகள் எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் மாகாணத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதற்கு முதலமைச்சர் தீர்க்கமான முடிவை விரைவாக எடுக்கவேண்டும் எனவும் பா.டெனீஸ்வரன் கோரியுள்ளார்.

Leave a comment