தலைவர் என்ற ரீதியில் தோல்வியை ஏற்க முடியாது

367 2

இந்தியாவுடன் ஆரம்பமாகியுள்ள போட்டிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும்தலைவர் என்ற ரீதியில் தோல்வியை சந்திக்க தான் விரும்பவில்லை என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

உலகின் முதற்தர அணி அல்லது 8ஆம் நிலையில் உள்ள அணியோ தனக்கு வெற்றி என்பது அவசியம் என்றும்இறுதிவரை தமது அணி விளையாடும் எனினும்இ இறுதி முடிவை எங்களால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்றும் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இந்திய அணியுடன் நேற்றைய தினம் கண்டியில் ஆரம்பமான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் உலகின் முதற்தர அணி ஒன்றிட்கு எதிராக விளையாடுகிறோம் என்பதை மறக்கவில்லை என்ற போதும்இகுறித்த போட்டியில் வெற்றி பெறுவதை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த தலைவன் என்பவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணியுடன் இருக்க வேண்டும் என்றும்இ இளைஞர்கள் தமது திறமைகளைக் காட்டுவதன் மூலம் எங்களால் முன்னோக்கி வரமுடியும் என்றும் தினேஸ் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment