நீர்கொழும்பு குரண பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சமயங் என்ற பாதாள உலகத்தவரின் மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஜிரகுமார எனப்படும் குறித்த சந்தேகத்திற்குரியவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் சிலர் வான் ஒன்றில் பயணிப்பதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய காவல்துறை அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வான் குருண பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்த ஆயுததாரிகள் காவல்துறை அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் கொள்ளையர்களாக கருதப்படும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

