வடக்கில் மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சி- சஜித் பிரேமதாச

396 0

வடக்கில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை பொறுக்கமுடியாத சிலர் அதை குழப்பி மீண்டும் ஒரு இரத்த ஆற்றை ஓடவைக்க முயற்சிப்பதாக வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் கீழ் வடக்கில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டவர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் கீழ் நிர்மான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய பயுலுனர் தொழிற்பயிற்சி அதிகாரசைப ஆகியன இணைந்து மேற்கொண்ட சில்ப சவிய வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்த பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ் திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையக்தில் இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டு தொழிற் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு தொழில்சார் உபகரணங்களை வழங்கி வைத்தார்
வடக்கில் சுமார் நானூறு பயனாளிகள் இத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகளை பூர்த்தி செய்துள்ளதுடன் அவர்கிற்கு சுமார் பதினையாயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்
நல்லாட்சி அரசின் கீழ் 2020ம் ஆண்டிற்குள் நாடு முழுவதிலும் தனது அமைச்சின் கீழ் 2500 வட்டுத்திட்டத்திட்ட கிராமங்களை அமைப்பது தமது எதிர்பார்ப்பென்று குறிப்பிட்ட அமைச்சர் வடக்கிலும் அடுத்த இரண்டு வருடங்களிற்குள் சகலருக்கும் வீட்டுத்திட்டம் வழங்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் இங்கு உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டார்-
வறுமைக்குட்பட்டு அரசாங்க அலுவலர்களாக கடமையாற்றும் அரச கூழியர்களிற்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோனதிராஜா குறிப்பிட்டார்-

Leave a comment