உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் பலி!

355 0

வென்னப்புவ -லுனுவில மருத்துவமனையின் அருகாமையில் உந்துருளி மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் லுனுவில பிரதேசத்தினை சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய உந்துருளியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை – குச்சிவெலி பிரதேசத்தில் உந்துருளி ஒன்று வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

Leave a comment