மன்னார் பேசாலை பகுதியில் அகழ்வுப் பணிகள் (காணொளி)

34568 0

 

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்றினுள் இனம்தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவூடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பேசாலை 4 ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் உள்ள மீன்வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று விசாரனையினை மேற்கொண்டனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸார் கடந்த 8 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மதியம் 1.00 மணியளவில் குறித்த பகுதியில் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் பெக்கொ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் ஆராம்பமானது.

எனினும் குறித்த அகழ்வின் போது ஒரு சில உலோகப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும், எவ்விதமான மர்மப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment